Monday, 9 September 2024

ஓடத்தில் பிடித்தவை - பாகம் 1

ஓடம்...

வலைதள (Internet) ஆற்றில் நான் பயணித்துக் கொண்டிருந்த போது என்னை படிக்கச் செய்த சில பதிவுகள் ... இது பதிவு என்னுடையதல்ல... 

சீனாவின் பட்டும், இந்திய மிளகும் பட்டுசாலை எனும் சாலை வழியாக துருக்கி மூலம் ஐரோப்பாவினை அடைந்துகொண்டிருந்தன, அது ஒன்றே பிரதான இணைப்பு.

அலெக்ஸாண்டர் காலம் முதல் போப்பாண்டவர்கள் உச்ச காலம் வரை அது ஐரோப்பியர் கட்டுபாட்டிலே இருந்தது, வியாபாரம் அதன் மூலமே நடந்தது.

இது யார் கட்டுபாட்டில் இருப்பது என்று தொடங்கிய அரசியல் போர், பின் மதச்சாயம் பூசப்பட்டு சிலுவைப்போர் என தொடர்ந்தது, வலுவான துருக்கியர் அனாசாயமாக விரட்டினர், இந்நிலையில்தான் எப்படியோ ஆசியா சுற்றி வந்து , இந்தியாவினை பார்த்து வாயினை பிளந்தான் அவன்

இன்று நாம் ஐரோப்பாவினை ஆஆஆ என பார்கின்றோம் அல்லவா? அப்படி.

உலகின் வரலாற்றை மாற்றி போட காரணமாயிருந்தவன் மார்க்கோ போலோ, இத்தாலிக்கார வியாபார் செட்டி

வியாபாரிதான் ஆனால் இந்தியா, சீனம் என ஆசியாவினை சுற்றிவிட்டு ,செல்வம் இந்தியாவில் குவிந்து கிடக்கிறது என்ற ஐரோப்பியரின் கனவிற்கு, ஆமாம் நானே கண்ணால் பார்த்த சாட்சி என்று சூடமேற்றி சத்தியம் செய்தவர்.

அதுமுதல் “இந்தியா கிறுக்கு” பிடித்து அலைந்தது ஐரோப்பா, தேடினார்கள், முதல்வெற்றி போர்ச்சுகல்லுக்கு உபயம் வாஸ்கோடகாமா, அவன் கோழிக்கோட்டில் மதமாற்றம் தனக்கென ஒரு நாடு என முயன்றபோது இந்துக்கள் அவனை அடித்து கொன்றார்கள்

பின் கிருஷ்ணதேவராயரிடம் சென்று கோவா பக்கம் அவர்கள் பதுங்கினார்கள், வெடிபொருளுக்காக இன்னும் சில விஷயக்களுக்காக நாயக்கரும் அவர்களை அனுமதித்தார்

வாஸ்கோடகாமா வழியில் பலர் வந்தார்கள் , அவர்கள் வரும்பொழுது, முக்கால சோழ நாட்டின் பகுதியான அந்த கடற்கரை நாயக்கர்களுக்கு கட்டுபட்டதாயிருந்தது, ஆனாலும் ஆண்டு கொண்டிருந்தது கோலொண்டா சுல்தான்

அந்த கோல்கொண்டா சுல்தானுக்கு நாயக்கர்கள் கட்டுபட்டவர்களாய் இருந்தார்கள்

இங்கே 15ம் நூற்றாண்டில் வந்தவர்கள் போர்ச்சுகீசியர்கள், அவர்கள் செல்லுமிடமெல்லாம் செய்யும் மதமாற்றத்தை இங்கும் செய்து, மயிலாப்பூர் கோவிலை அழித்து அங்கே "செயின்ட் தாமஸ்" என பொருள்படும் சாந்தோம் பகுதியினை அமைத்தார்கள்

இயேசுவின் சீடனான தாமஸ் அங்கு வரவே இல்லை, இலங்கையில் கண்ணகி கோவிலை மாதா கோவில் என மாற்றிய கோஷ்டி, வேல்விழி அம்மனை வேளாங்கண்ணி அம்மன் என மாற்றிய கோஷ்டி, இங்கும் சிவன் கோவிலை சாந்தோம் என மாற்றிற்று

அங்கே ஒரு கோட்டையினை கட்டினார்கள், 15ம் நூற்றாண்டில் அதை கட்டினார்கள் அதன் பெயர் சாந்தோம் கோட்டை

அன்று மெட்ராஸ் எனும் பெயர் இல்லை, சென்ன கேசவ பெருமாள் கோவில் என அறியபட்ட ஊராய் இருந்தது, சென்ன கேசவ என்பதுதான் சென்னை என மருவிற்று

இக்கால கட்டத்தில்தான் , மெட்ரூஸ் எனும் போர்ச்சுகீசிய கவர்னர் இறந்து அவன் பெயரால் அவ்விடம் மெட்ருஸ் என்றாகி பின் மெட்ராஸ் என்றானது

15ம் நூற்றாண்டின் முடிவில் கோல்கொண்டா சுல்தானுக்கும் போர்ச்சுகீசியருக்கும் மோதல் நடந்து அங்கே தலை வெட்டபட்ட நிலையிலும் போராடிய சுல்தான் தளபதி வரலாறெல்லாம் நடந்தது

பிரிட்டிசார் இங்கு 16ம் நூற்றாண்டில்தான் வந்தார்கள், பின் இந்த கடற்கரை பக்கம் வந்தார்கள்

"சோழ மண்டல" கடற்கரையினை அப்போதே போர்ச்சுகீசியர் "கோர மண்டலம்" என மாற்றியிருந்தார்கள், அவர்களின் கோர முகம் அப்படி

பின்னாளில் பிரிட்டனும்,பிரான்சும் போர்ச்சுக்கல்லை பிடரியில் பிடித்து தள்ளி விரட்ட போர்ச்சிகீசியர் வெளியேறினர். ஆனால் அந்த “மெட்ராஸ்” என்ற பெயர் மாறவில்லை, பிரிட்டிசாரும் அப்படியே அழைத்தனர், தமிழில் அது “மதராசபட்டினம்” ஆயிற்று.

அந்த இடத்திற்கு கொஞ்சம் தள்ளி, பிரிட்டானியர் கோட்டை கட்டினர், அந்நாளைய பிரிட்னுக்கு புனித ஜார்ஜ, தெற்கத்தியருக்கு பெரும்பாலும் முனியாண்டி, மதுரை வீரன், இசக்கியம்மன், சுடலையாண்டவர் போல அவர்களுக்கு இங்கிலாந்தின் காவல் தெய்வம் ,புனித ஜார்ஜ் பெயரினை இட்டார்கள். மறக்காமல் ஒரு மாதா கோயிலும் கட்டிகொண்டார்கள்.

கோட்டைக்கு நிலம் வாங்கிய நாள் இன்று ஆகஸ்ட் 22ல் கொண்டாடும் சென்னை தினமாம், கோட்டை திறக்கபட்டநாளில்தான் சென்னை தினம் கொண்டாடி இருக்கவேண்டும், ஆனால் யாரோ புண்ணியவான் பத்திரம்முடிந்த நாளையே குறித்துவிட்டான்

பிரிட்டிசாரின் அக்கோட்டைதான் கிட்டதட்ட 350 வருடமாக ன்னிந்தியாவின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்ந்ததும் அந்த கோட்டை, மாநிலங்கள் பிரிக்கபட்டபின் இன்றுவரை தமிழக தலைவிதி எழுதபடுவது எல்லாம் அந்த கோட்டைதான்

 பலவகை விவாதங்ள், தலைவரின் சிறப்புரைகள்,சட்டங்கள், தீர்மானங்கள் என‌ இன்னும் பல சிறப்புகளுக்கு அடையாளம் அந்த கோட்டை.

இத்தாலியின் வெனிஸ் போலவே திட்டமிட்ட நீர்வழிச்சாலையினையும் பிரிட்டிசார் அமைத்திருக்கின்றார்கள், அந்த சென்னை அப்படித்தான் இருந்திருக்கின்றது, பின்னாளில் எல்லாம் நாசமாய் போய்விட்டது.

இந்த இடம் கோட்டைக்காக வாங்கும் பொழுதும், அதில் பெரும் லண்டன் கனவான்கள் ஆளும்பொழுதும், நிச்சயம் திருக்குவளை வாரிசும் வந்து ஆளும்ம் நினைத்திருப்பார்களா?

பன்னீரும் பழனிச்சாமியும் அமர்வார் அதை சசிகலா என ஒருஅம்மையார் கண்டு அழுவார் என யார் நினைத்திருபபர்?

விதி போட்ட சாலை அப்படி

அக்கோட்டையில்தான் இந்தியாவில் பிரிட்டிசார் ஆட்சியினை தொடக்கி வைத்த ராபர்ட் கிளைவ் வசித்தான், அதன் மாடத்திலிருந்து அவன் தேநீர் பருகுவானாம், அவனின் திருமணம் கூட சென்னை கோட்டையில்தான் நடந்தது,

அப்பொழுது சென்னை பகுதி நதிகள் எல்லாம் ஓடங்கள் ஓடுமாம், அதில் அவனுக்கு பிடித்தமான நதியில் அவன் படகோட்டுவானாம்

அதில் ஒன்று கூவம், இன்று நாறி கிடக்கும் கூவம், விடுங்கள். அக்காலம் அவ்வளவு அழகாய் இருந்திருக்கின்றது.

நிச்சயமாக சென்னைக்கு திருப்புமுனை கொடுத்ததே அந்த கோட்டைதான், அது அமையாவிட்டால் சென்னை இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது, , அசுரவேகத்தில் கிட்டதட்ட 60 கிராமங்களை விழுங்கி இன்று பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறது, இன்று கிட்டதட்ட 80லட்சம் மக்கள் வாழும் நகரம், ஆசியாவின் குறிப்பிடதக்க நகரங்களில் ஒன்று

பகை நாடுகளின் பெரும் இலக்குகளில் சென்னையும் ஒன்று, சில நாடுகளின் ஏவுகனைகளின் நுனி சென்னை நோக்கியே திருப்பபட்டு நிற்கிறது.

சென்னையும், அதற்கு காரணமான ஜார்ஜ் கோட்டையும் பல ஆபத்துக்களை கடந்துள்ளன், பாண்டிச்சேரி பிரென்ஞ் கவர்னர் டூப்ளேவிற்கு அதன் மீது ஒரு கண், பதிலுக்கு பிரிட்டிசார் அவர் முதுகை உடைத்துவிட்டார்கள்

ராபர்ட் கிளைவ் எத்தனையோ போர்களுக்கு அங்கிருந்துதான் திட்டமிட்டான், உத்தரவு கொடுத்தான்.

மருதநாயகம் பிரெஞ்ச் படைகளை விரட்டி அதனை மீட்டு தான் தன் வீரத்தினை நிரூபித்துகாட்டினான்.

முதலாம் உலகப்போரின் போது உலகை மிரட்டிய ஜெர்மனியின் நீர்மூழ்கி எம்டன் சென்னை கோட்டையை குறிவைத்து தாக்கியது,(அந்த கல்வெட்டு இன்றும் உண்டு), முதலும் கடைசியுமாக சென்னை மீது நடந்த ராணுவ தாக்குதல் அது, அதன் பின்னர் ஆபத்தில்லை

ஆனால் ஆபத்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் பொழுது எழுந்தது, சென்னை எங்களுக்கு சென்னை வேண்டும் அல்லது சண்டிகர் போல பொதுநகராக இருக்கலாம் என போராடினர் தெலுங்கர்கள், கிட்டதட்ட அவர்களுக்கு சாதகமான சூழல், அன்றேல்லாம் ஐதராபாத் சிறு நகரம், விசாகபட்டினம் தூத்துக்குடி அளவிற்கே இருந்தது, விடமாட்டோம் என பிரளயம் செய்தனர் தெலுங்கர்கள்.

“எங்க இருந்தா என்ன இந்தியாவில தான இருக்குண்ணேன்??” என காமராஜர் சிந்திக்க, “வெங்காயம் அப்படியும் அது திராவிடநாட்டிலதான இருக்கு” என்று பெரியாரும் ஒதுங்கிகொண்டனர்,அண்ணாவோ பணம் படைத்த பெரியாரை எதிர்த்து என்ன செய்ய என சிந்தித்த காலம், கருணாநிதி அன்று கலைஞர் அல்ல, ஆனால் அறியபட்ட வசனகர்த்தா, அவர் என்ன ஆகபோகின்றார் என்பது அவருக்கே தெரியாத காலம், போராட யாருமில்லை,

ஒரே ஒருவரை தவிர அவர் ம.பொ.சிவஞானம், தமிழரசு கட்சி நிறுவணர்.

அங்கிள் சைமன் தான் முதலில் தமிழர் கட்சி கண்டவர் ,ஆதித்தனார்தான் வழிகாட்டி என யாராவது சொன்னால் அவர்களை அப்படியே ராஜபக்ஸேவிடம் ஒப்படைப்பது அவருக்கு நலம், அரசியலையாவது கற்பிப்பார்.

பலர் தமிழியக்கம் நடத்தினர் அவரில் சிலப்பதிகாரத்தை கரைத்து தெளித்த “சிலம்பு செல்வர்” என அறியபட்ட ம.பொ.சி பிரசித்தம், அவரை விட அவர் மீசை பிரசித்தம், அண்ணாவின் மயக்கும் தேன் தமிழில் சற்று மங்கிபோனவர் ம.பொ.சி.

ஆனால் தமிழரின் எல்லையை காத்த போராட்டம் இவரால் மட்டும்தான் நடைபெற்றது, அவரின் எழுச்சியான போராட்டத்தில் சென்னை தமிழகத்திற்கு வந்தது, திருத்தணியும் வாங்கிகாட்டினார், திருப்பதி முதல் திருஅனந்தபுரம் வரை தமிழரின் எல்லை என முழக்கமிட்டார்.

திரு என்பது தமிழ்பெயர், திருப்பதி தமிழனுக்கே சொந்தமான அடையாளம், என ஆதாரத்தோடு அவர் முழங்கிய முழக்கம் கொஞ்சமல்ல‌

திருப்பதியும் உங்களுக்கா என தெலுங்கள் பொங்கி தற்கொலை முயற்சி வரை சென்றனர், “தேவுடா” தமிழகம் வர மறுத்தார் அங்கே தங்கிவிட்டார், கொஞ்சம் தமிழகம் போராடியிருந்தால் திருப்பதி கிடைத்திருக்கும்,இந்து அறநிலையதுறை அமைச்சருக்கு போரே நடந்திருக்கும்.( பல ஊழலும் நடந்திருக்கும் ), கிடைக்கவில்லை அதுவும் நல்லது.

தந்திரமாக கேரளம் முந்திகொண்டு திருவனந்தபுரம் எங்கள் தலைநகர் என்றது, நிச்சயமாக அன்று அது அவர்கள் தலைநகராக இருக்க சம்பந்தமில்லாதது, அரசியலில் முந்திகொண்டார்கள், அதுவும் பரவயில்லை, இல்லை என்றால் பதமநாபசாமி கோயில் என்ன ஆகியிருக்குமோ, சுரங்கம் அமைத்து தூக்கியிருப்பார்கள், மணலையே விடாத தமிழகம் இது.

சினிமா ஸ்டூடியோக்கள் கூட சென்னையை நம்பாமல் சேலத்தில்தான் அக்காலத்தில் கட்டபட்டன, முதன் முதலில் துறைமுகமாக மட்டும் அறியபட்ட சென்னை கொஞ்சம் கொஞ்சமாக எல்லா தொழிலின் சந்தையாக‌ மாறிற்று, இன்று சென்னையின் நிலை வேறு, தமிழகத்தின் எல்லா கிராமங்களிலிருந்தும் அதனோடு நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ தொடர்பில்லாதவர் யாருமில்லை.

மக்கள் தொகை பெருக,பெருக சில பிரச்சினைகளும் பெருகும், அதனில் சென்னை சிக்கி இருக்கலாம், ஆனால் சில சிறப்புக்கள் சென்னைக்கு எப்போதும் உண்டு.

சாதிய கலவரமோ, இல்லை மத,இன‌ ரீதியான வன்முறைகளிலோ சிக்காத இந்திய நகரங்களில் சென்னையும் ஒன்று, கல்கத்தா,மும்பை என பெருந்தீ எழும்பி தாண்டவமாடிய நகரங்கள் உண்டு, சென்னை அப்படியல்ல, அதன் மக்களும் அப்படியல்ல,

இதுதான் சென்னை இக்காலம் வரை பதித்திருக்கும் முத்திரை.

மயிலாப்பூர் கோயில், கபாலீஸ்வரர் ஆலயம்,,விக்டோரியா ஹாலும் அதிலுள்ள ரவிவர்மனின் ஓவியங்கள், எழும்பூர் மியூசியம், பல தலைவர்கள் வாழ்ந்த இல்லம், விவேகானந்தர் தங்கிய இல்லம், ரோஜா முத்தையா நூலகம், யில் நிலையங்கள், காமராஜரை தவிர எல்லா முதல்வர்களையும் தமிழகத்திற்கு தந்த ஏ,வி.எம் ஸ்டூடியோ, போயஸ் கார்டன் நாடக பள்ளி என இன்னமும் ஏராள பெருமை கொண்டிருந்தாலும்

முதல் அடையாளம் அந்த கோட்டையே. அந்த கோட்டை இன்று ராணுவத்திற்கு சொந்தமானது

இது நல்ல துறைமுகம் என கண்ட போர்த்துகீசியரும், கோட்டை அமைத்து சென்னைக்கு அடிகோலிய பிரிட்டிசாரும், அதனை குறிப்பிட்ட இடமாக மாற்றிய ராபர்ட்கிளைவும் (கிளைவின் திருமணம் சென்னை கோட்டையில்தான் நடந்தது), அதனை மாதிரி நகரமாக திட்டமிட்டு கொடுத்த லார்டு ரிப்பனும், பின்னாளில் அதனை தமிழரின் தலைநகராக மாற்றி தந்த ம.பொ.சியும் ஏனோ மனதில் வந்து வந்து போகின்றார்கள்.

அந்த பிரிட்டிசாரின் கோட்டையில் அடிமை வியாபாரம் நடந்தபோது புனேயில் இருந்து ஓடிவந்து மீட்டு இனி அடிமை வியாபாரம் இங்கே நடக்க கூடாது என தடுத்த் வீரசிவாஜியும் நினைவுக்கு கட்டாயம் வருவான்

அடிமைமுறை ஒழிப்பினை உலகில் முதலில் கண்டது அக்கோட்டைதான், வீரசிவாஜி அதை செய்தான்

(உண்மையில் முதலில் சென்னையினை காத்தவன் ராபர்ட் கிளைவ், அவன் இல்லாவிட்டால் சென்னை பிரெஞ்ச்காரன் வசம் ஆகியிருக்கும்

பாண்டிச்சேரி, கோவா போல ஒரு மாதிரி ஊராக அது மாறியிருக்கும், கிளைவ் அதனை காத்தான்)

இவர்கள் இல்லாவிட்டால் தமிழகத்தில் சென்னையோ, இல்லை சென்னையில் தமிழர்களோ ஏது??

இன்று சென்னை நாள்

மாற்றம் ஒன்றே மாறாதது, காடாக கிடந்த இடம் கிராமங்களாக மாற ஒரு காலம் வந்தது, பின் அது நகரமாக மாற இன்னொரு காலம் வந்தது

இனி அந்த நகரத்தை அப்படியே வைத்துவிட்டு அருகில் மிகபெரிய துணைநகரம் அமைப்பதே சரியானது

காலம் அதையும் செய்யும், பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கபட்டு வளர்ந்த நகரம் அது, பிரிட்டிசார் வெளியேறும் போது உலகின் முன்னனி நகராய் இருந்தது

பின் அடுத்த ஆட்சியில் என்னாயிற்று என்பது ரகசியமல்ல‌

கல்கத்தாவினை .........டுகள் நாசமாக்கினார்கள், சென்னையினை .... விடம் பின்னடைய வைத்தது

குட்டி ஊரான பெங்களூர் தேசியத்தில் வளர்ந்தது, பம்பாய் தேசியத்தில் இருந்ததால் உலகின் முக்கிய நகரமாயிற்று

சென்னை சிங்கப்பூர், ஹாங்காங் போல வளர்ந்திருக்கவேண்டிய நகரம் , அதன் அடிப்படை கட்டுமானம் அழகானது உறுதியானது

ஆனால் அதன்மேல் ....விடம் கட்டி எழுப்பிய கோபுரம் சரியாக அமையவில்லை சென்னை குழம்பி பொனது

அதன் துணைநகரமாவது நல்லபடியாக எழுந்து வரட்டும், அது உருவான பின் நோய்பட்ட சென்னை தன்னை சீரமைத்து கொள்ளட்டும்

இது பிரம்ம ரிஷி (Facebook post) பதிவு

ஓடம் இன்னும் பயணிக்கும் ... 

No comments:

Post a Comment