Monday, 9 September 2024

பாபநாசம்

தென்னகத்தின் நவ கைலாய தலங்கள்
(வலைதள பதிவின் நகல்)

01 : பாபநாசம்
அகத்தியபெருமான் தன் சீடன் ரோமரிஷி முனிவர் கைலாயத்தினை அடையும் பாக்கியம் பெற வேண்டி ஒன்பது தாமரை மலர்களை கொடுத்து, அவை ஒவ்வொன்றும் கரையேறுமிடத்தில் ஒரு லிங்கம் செய்து வழிபட சொன்னார்

அப்படி தாமிரபரணியில் அவர் இட்ட தாமரையில் முதல் தாமரை ஒதுங்கிய இடம் இத்தலம் , அங்கே சிவனை வழிபட்டார் ரோமரிஷி முனிவர்

அதுவரை அங்கு பெரிய ஆலயமில்லை, அகத்தியர் அங்கிருந்து இன்னும் பெரும் தொலைவில் வனத்தில்தான் இருந்தார், இந்த முதல் தாமரை ஒதுங்கிய இடத்தில் லிங்கம் வைத்து வழிபட்டார

நவ கைலாயத்தில் முதல் கயிலாயம் இதுதான்

நவதாமரை என்பது நவகிரகங்களையும் குறிக்கும் விஷயமாகவும் அகத்தியர் அருளினார், அவ்வகையில் இது சூரிய நவகைலாயம் என்றானது

இந்த தலத்துக்கு பாபநாசம் என பெய ர் வர காரணமும் முதன் முதலில் தன் பாவத்தை களைந்து கொண்டவனுமானவன் இந்திரன், தேவராஜன் எனு அந்த இந்திரன்

அவன் ஒரு காலத்தில் தவிர்க்கமுடியா சூழலில்  அசுர குரு சுக்கிராச்சாரியாரின் மகன் துவஷ்டாவை தன் குருவாக ஏற்றிருந்தான் ஆனால் துவஷ்டா மறைமுகமாக அசுரருக்கு உதவிகொண்டிருந்தான், இந்தனால்  இந்திரன் அவனை கொன்றுவிட்டான்

(திருவிளையாடல் புராணத்திலும் இந்த காட்சி உண்டு)

கொல்லபடும்போது துவஷ்டா குரு ஸ்தானம் என்பதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து கொண்டதும் அவன் பாவம் தீரவும் இழந்ததை பெறவும் இந்த தலத்துக்கு சென்று வழிபட சொன்னார்கள் ரிஷிகள்

அப்படி அவன் இங்கு வந்து நீராடி இந்த சிவனை வணங்கி தன் பாவம் தீர்த்துகொண்டான்  அப்படி அந்த இந்திரன் எல்லா மக்களுக்கும் வழிகாட்டினான், அவன் பாவம் போக்கிய இடம்  "பாபநாசம்" என்றானது, அது எல்லா மக்களுக்கும் பாவம் போக்கும் இடமுமாயிற்று

இதனால்  இத்தலத்துக்கு ‘இந்திரகீழ ஷேத்திரம்’ என்ற பெயரும் கிட்டியது.

அகத்தியருக்கு சிவன் மணகோலம் காட்டியதால் அவர் கல்யாணசுந்தரேஸ்வரர், அன்னை உலக நாயகி என காட்சியளிக்கின்றனர்

அப்படியே அங்கே அகத்தியரும் அவர்மனைவி லோபமுத்திரையும் குடிகொண்டு அருள்தருகின்றார்கள்

ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் வாயில் வழி உள்ளே சென்றவுடன் வடக்கு நோக்கியபடி அதிகாரநந்தி சன்னதியினை காணலாம்  அவரை வ‌ணங்கி அனுமதி பெற்று நேரே சென்றால் சுவாமி பாபநாசநாதர் சன்னதி. அங்கே  கருவறையில் சுவாமி பாபநாசநாதர் கிழக்கு நோக்கி காட்சிதருகிறார். அவருக்கு முன் உள்ள மண்டபத்தில் தென் திசை நோக்கிய சன்னதியில் உற்சவ நடராஜர் சிவகாமி அம்மையோடு அமையப்பெற்றுள்ளது.

சுவாமி சன்னதியில் இருந்து சுவாமிக்கு இடப்புறம் உலகம்மை சன்னதி அமையப்பெற்றுள்ளது.

முதல் பிரகாரத்தில் சூரியன், நால்வர், சூரதேவர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சப்தமாதர்கள், தட்சிணாமூர்த்தி, கன்னிவிநாயகர், உற்சவ மூர்த்திகள், கல்யாணசுந்தரர், பிட்சாடன மூர்த்தி, லிங்க மூர்த்திகள், சண்டிகேசுவரர், துர்க்கை, சுப்பிரமணியர், சனீஸ்வரர், பைரவர், சந்திரன் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக பிரகாரத்தின் நான்கு புறங்களிலும் அவரவர்குரிய இடத்தில் காட்சியளிக்கின்றனர்.

இரண்டாம் பிரகாரமான உள்வெளி பிரகாரத்தில் பனையடியான், விசுவநாதர் சன்னதியுடன், சுவாமி கருவறைக்கு நேராக பின்புறம் இக்கோவில் விருட்சமான களா மரம் அமையப்பெற்றுள்ளது. இம்மரத்தின் அடியிலும் லிங்கத்திருமேனியராய் சுவாமி அருள்பாலிக்கிறார்.

வெளி பிரகாரச்சுற்று முடிந்து முன் பக்கம் வருகையில் நவக்கிரக சன்னதியும் அமையப்பெற்றுள்ளது.

கொடிமரத்திற்கு வடதிசையில் அமையப்பெற்றுள்ள தென்திசை நோக்கிய சிறப்பு சன்னதியில் புனுகு சபாபதி காட்சியளிக்கிறார்.

இந்த ஆலயம் காலத்தால் மகா பழமையானது, அவ்வப்போது அது சிதைந்தும் வந்துள்ளது. இந்த பகுதிகள் அடிக்கடி சேரமன்னர்களிடம் பாண்டிய மன்னர்களிடமும் மாறி மாறி வந்தவை என்பதால் இருவருமே திருப்பணி செய்திருக்கின்றார்கள்

அவ்வகையில் இது மாறவர்மன் சுந்தரபாண்டியனால் க்ட்டபட்ட ஆலயம்

இங்கிருக்கும் சிவன் கல்யாணேஸ்வரர் என அழைக்கபடுகின்றார், அகத்தியருக்கு அவர் திருமண கோலம் காட்டினார் என்பது இங்கே ஆத்மா பரமாத்மாவுடன் கூடும் கோலத்தை சொல்வது

மலைலிலிருந்து தாமிரபரணி சமநிலையினை அடையும் அந்த இடமானது  நதி பூமியுடன் கூடுவதை சொல்லும் இடமானது அந்த தத்துவத்தை மவுனமாக சொல்கின்றது

இந்த சிவன் ஒருவன் பாவங்களை முழுக்க மன்னிப்பார், அவன் பாவம் நாசமாகும், பாவம் நாஸ்தியானால் அந்த ஆத்மா துலங்கும், துலங்கிய ஆத்மா கர்மம் முடித்து இறைவனை அடையும் எனது அந்த ஆலயத்தின் தாத்பரியம்

இந்த ஆலயம் பாவங்களை அழிக்கும், பாவங்கள் அழியும் மனிதனுக்கு பிறப்பில்லை அவன் கர்மம் முடித்து கிளம்புவான் அந்த ஆத்மா சிவனை அடையும் என்பது இங்குள்ள தத்துவம்

ஒருவனிடம் இருக்கும் பாவத்தை, தீமையினை, மாசுக்களை அகற்றி அவனை வாழவைக்கும் வரத்தினை இந்த சிவன் அருள்வார்

அதனாலே இது சூரியனுக்குரிய தலமாகவும் அறியபடுகின்றது

சூரியன் இன்றி எப்படி இந்த உலகமில்லையோ , எப்படி உயிர்களும் இயக்கமுமில்லையோ அப்படி உலக உயிர்களின்ன் ஜாதகமுமில்லை

ஆம், சூரியனை மையமாக வைத்தே ஆண்டுகணக்கு முதல் ஜாதகம் வரை உண்டு

சூரியனே தலமையினை தரும் கிரகம், அங்கே எந்த பாகுபாடுமில்லை, அங்கே வெளிபடைதன்மை உண்டு, செல்வாக்கு உண்டு, எதையும் தனக்கென எடுக்காமல் அள்ளி அள்ளி கொடுத்து வாழவைக்கும் குணம் உண்டு

சூரியன் சரியாக இல்லையேல் ஒரு ஜாதகம் சரியாக அமையாது, அவனுக்கு குழப்பமும் சிக்கலுமே வாடிக்கையாகும்

சூரியன் என்பது வெப்ப சக்தி, அந்த சக்திதான் உயிர்களின் அடிப்படை, அந்த வெப்பம் இருக்கும் இடத்தில்தான் உயிர் தங்கும், மானிட உடல் கூட அப்படித்தான் வெப்பத்தோடு உயிரொடு இருக்கும்

அப்படியான சூரியனே அக்னி சக்தி, இந்த அக்னியே சிவவடிவம், அந்த அருள் இங்கே நிரம்பி கிடக்கின்றது

லவுகீகமாகவும் ஜாதகரீதியாகவும் சூரியனின் எல்லா அருளையும் தரும் தலம் இது

சூரியன்   ஒருவன்   ஜாதகத்தில்     நீசம்  பெற்றிருந்தால் நல்லதல்ல‌.

ஒருவரின்   ஜெனன  ஜாதகத்தில்   மேசத்தில்   முதல்  10   பாகைக்குள் சூரியன்  உச்சம்   பெற்று   இருந்து       ,குரு ,செவ்வாய் பார்வை பெற்றிருந்தால் அந்த  ஜாதகம் யோக ஜாதகம்
    
ஆம், சூரியனே ஒளிவடிவம், அந்த ஒளிவடிவமான சூரியனே   ஒருவருக்கு  ஆன்ம   பலம்  அளிப்பவர்   இவர்.   ஆண் தன்மை எனும் தைரியமும் ஆளுமையும் பெண் தன்மை எனும் ஆகர்ஷமும் கொடுப்பது சூரியனின் ஜாதக இருப்பிடமே  

சூரியன் அரசனுக்குரிய கிரஹம்,    ஒரு அரசன் அவன் மட்டும் வலுவானகாக இல்லாம்ல் அமைச்சர் சேனை என எல்லாம் வலுவாக அமைந்தால் சிறப்பான், அப்படி சூரியனோடு சேரும் கிரகங்களை பொறுத்து ஒருவன் ஜாதகம் அமையும்

அதாவது ஜாத்கத்தினை நிர்மானிப்பதே சூரியன் இருக்குமிடம்

சூரியன் ருத்த்ரனை அதிதேவதையாக கொண்டவர், ருத்திரன் என்றால் சிவம், அந்த சிவன் மிகபெரிய அருள் வழங்கும் ஆலயம் இது

இந்துக்கள் அண்டத்தில் இருப்பதையெல்லாம் பிண்டத்திலும் கண்டவர்கள்.  அதனால் ஆத்மாவினை சூரியனின் வடிவமாகக் கண்டார்கள்.

மானுட ஆத்மாவினை சூரியனின் சாயலாக கண்டார்கள், சுருக்கமாகச் சொன்னால் உயிர்சக்தி ஆத்ம சக்தி என சரியாக சொன்னார்கள்.

சூரியனை ஆத்மகாரகன் என அவர்கள் சொன்னதிலே எல்லா ரகசியமும் அடங்கிப் போயிற்று.  அதுவும் அந்த தலம் சூரியனுக்கானது என்பதிலே ஆத்மபலம் தரும் ஆலயம் அது என்பது இன்னும் தெளிவாயிற்று.

ஆக லவுகீகமாக ஒருவனை ஜாதகரீதியாக அருள்பெருக்கும் ஆலயம் இது, ஆன்மீக ரீதியாக ஒருவனுக்கு ஆத்மபலம் கொடுக்கும் ஆலயமும் இது

கையாலம் எனும் சிவநிலையினை அடைய பாவம் நாசமாக்கபட வேண்டும், ஆத்மபலம் அதிகரிக்கபட வேண்டும், அந்த ஆத்மபலத்தை தரும் ஆலயம் இது

இந்த ஆலயம் சிவனின் அருளை பூரணமாக தரும், ஜாதக ரீதியான பலனை சூரியனை முன்னிட்டு தரும், அப்படியே ஆத்மபலத்தை இன்னும் அதிகரிக்கும்

இந்த ஆலயம் சிவனுக்கு மட்டும் சிறப்பன்று, அகத்தியர் அருள் மட்டும் பெரிதன்று, இது பாபத்தை மட்டும்  போக்கும் தலம் அல்ல, இது அன்னையின் சக்தி பீடங்களில் ஒன்று

ஆம், விமலை பீடம் என அன்னையின் இடுப்பு பக்கம் விழுந்த இடம் இது, இடுப்பு என்றால் தாங்குமிடம் என பொருள் அன்னை இங்கு தாங்கும் சக்தியாய் நிற்கின்றாள்

இந்த சக்திபீட அன்னை எத்தனையோ அதிசயங்களை நிகழ்த்திகாட்டினாள், அன்னைக்கு பிடித்தமான மலைதொடர் அது

மேற்கு தொடர்ச்சி மலை என தாமிரபரணி உருவாகும் அந்த இடம் சாதாரணம் அல்ல வெறும் மலைகாடு அல்ல,அங்கு இருப்பதெல்லாம் சூட்சுமம், இன்றும் மனிதர் அறிந்துகொள்ள முடியா சூட்சுமம்

தாமிரபரணியின் மூலமே இன்றுவரை அறியமுடியாதது , அறியமுயன்று சென்றோர் கூட இனம்புரியா சக்தியாலும் அதுவரை உலகில் காணப்படாத ராட்சத வண்டுகளாலும் அலறி அடித்து ஓடினர் என்பதுதான் வரலாறு

சூட்சும தெய்வங்கள் குடியிருக்கும் மலை அது

அங்கேதான் அகத்தியர், அத்திரி மகரிஷி என எல்லோரும் இருந்தார்கள், நம்பி தெய்வம் அங்கே குடிகொண்டது, சென்பகாதேவி அம்மன் வந்தாள், அன்னை பரமககல்யாணி குற்றாலத்தில்தான் குடியிருக்கின்றாள்

அந்த அன்னையின் பெயராலே அந்த ஊர் 'அம்பாள் சமுத்திரம்" என அழைக்கபட்டு இன்று அம்பா சமுத்திரம் என மருவிவிட்டது

அப்படி அன்னை ஆதிக்கம் செலுத்தும் பகுதி அவள் அரசாட்சி செய்யும் பகுதி அது, அவளே தாமிரபரணி அவளே அங்கு தென்றல் , அவளே தமிழ், அவளே அங்கு இயக்கம் அவளே அங்கு மகா சக்தி

கோமதி கல்லில் சிலையாக எழுந்ததால் அவள் கோமதி நாயகி, பார்வதியின் முத்தாரமாக வந்ததால் அவள் முத்தாரம்மன்

அப்படியான அம்மன் அங்கு உலகம்மை நாயகி, விமலை நாயகி என ஆட்சி செய்கின்றாள், சிவன் தன்னை அகத்தியர் மூலம் அடையாளம் காட்டியது போல் அன்னை அவளை 

மிக மிக அழகான பக்திவரலாறு அது, கம்பனுக்கும் காளிதாசனுக்கும் காளமேகனுக்கும் குமரகுருபரருக்கும் அன்னை தன்னை வெளிகாட்டியதுபோல் அந்த பக்தனுக்கும் வெளிகாட்டினாள்

ஆம், பாபநாசத்தை அடுத்த விக்கிரமசிங்கபுரத்தில் நமசிவாயக் கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார்.  அன்னையின் பெரிய பக்தர், அன்னை தவிர ஏதும் அறியாதவர், எந்த அளவு அன்னை மேல் பக்தி என்றால் 
தினமும்  அர்த்தசாம வழிபாட்டில் அம்பிகையை தரிசித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கவிபொழிவதில் வல்லவரான அவர் எப்போதும் பாடுவார் , கோவிலில் பாடுவார், கூட்டத்தில் பாடுவார், தனியே நடந்து செல்லும் போதும் பாடுவார்

தனியே நடந்து செல்லும் போதும் பாடுவார்

ஒருநாள் இவர் இங்கு தரிசனம் முடித்துவிட்டு அம்மையின் மீது பாடல்களைப் பாடிகொண்டு நடந்தபடியே வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் ஒரு பெண் அவரை தொடர்ந்து புன்னகைத்தபடியே வந்தாள்

அது அர்த்தசாமம் என்பதால் அது ஏதோ பிசாசு அல்லது மோகின் என்பது போல் எண்ணிய கவிராயர், அந்நாளில் வெற்றிலை குழப்பி துப்பினால் பேய் ஓடிவிடும் எனும் நம்பிக்கை படி அந்த அழகான உருவம் மேல் தாம்பூலத்தை துப்பினார், அது அவளின் சேலை மேல் பட்டது, அவள் இன்னும் புன்னகைக்க அவர் விறுவிறுவென நடந்து சென்றுவிட்டார்

மறுநாள் கோவிலை திறந்துபார்த்தால் அன்னையின் ஆடையில் யாரோ தாம்பூலம் துப்பியது இருந்தது, அதிர்ந்த அர்ச்சகர்கள் மன்னனிடம் விஷயத்தை சொனனர்கள்

அக்கால மனன்ர்கள் ஆலயத்தை கண்ணென தெய்வத்தை உயிரென கொண்டவர்கள், இந்த மகா துவேஷத்தை செய்தது யார் என மன்னன் கொதித்தெழுந்தான்

ஊரே அல்லோலப்ட்டது, கடைசியில் எப்போதும் அன்னை எச்சில் தெரிக்க பாடுபவர் என்றும், அன்னை முன் அவர் யாருக்கும் தெரியாமல் பாடி இந்த அவமானம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் சொன்னார்கள்

அவர் விசாரணைக்கு அழைக்கபட்டார், அங்கே தனக்கு இரவில் நடந்ததை சொன்னார் எல்லோரும் நகைத்தார்கள்

ஏதோ தாசி விவகாரம் என்றார்கள்  இன்னும் பல விஷயங்களை சொல்லி அவரை அவமானபடுத்தினார்கள்

அவர் முடிந்தவரை வாதிட்டார் ஆனால் பலனில்லை, அவரின் எதிரிகள் குதுகலித்தனர், கடைசியில் மன்னன் சொன்னான்

"கவிஞரே நீர் ஒரு சம்பவம் சொல்கின்றீர், ஆனால் சபையில் காட்சி இல்லாமல் எதுவும் எடுபடாது என்பதை அறிவீர், இங்கு இனி அன்னைதான் சாட்சி சொல்ல வேண்டும்

அவையோர் சொல்வது நீர் பூஜை முடிந்தபின் அருகிருந்து பாடி இப்படி நடந்துவிட்டது என்பது, நீர் சொல்வது ஏதோ உருவம் என பிதற்றுவது

ஆக நீர் சொல்வதற்கு சாட்சி இனி அன்னைதான்

அதனால் நான் தங்ககம்பி கொண்டு அன்னைசிலையின் கைகளில் பூக்களை கட்டிவைப்பேன், நீர் பாடவேண்டும், நேற்று நடந்ததாக நீர் சொல்வது உண்மை என்றால் அந்த பூக்கள் உம்மை தானாகவே அடையட்டும்" என்றான்

அன்னைமேல் நம்பிக்கை கொண்டு கவிராயரும் சம்மதித்தார், சாக வேண்டிய நிலையில் இருக்கும் அவரின் கடைசி சந்தர்ப்பம் அதுதான்

அப்படியே அந்த பாபநாசம் அம்மன் உலகநாயகி கையில் பூக்கள் தங்க கம்பியால் கட்டபட்டு கவிராயர் பாட வைக்கபட்டார்

கவிராயர் அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டரை போல, சரஸ்வதி அந்தாதி பாடிய கம்பனை போல  இங்கும் அந்தாதி பாடினார் நமசிவாய கவிராயர்

அவர் பாட பாட அந்த தங்க கம்பிகள் தானாக அவிழ அவிழ சபை அஞ்சி மவுனமானது

அந்த உற்சாகத்தில் கவிரயார் இந்த பாடலை பாடினார்

"விண்டல நின்ற சரற்கால சந்த்ரசு வேதமுக
 மண்டல மும்கை மலரோடுந் தோளின் வழிந்தரத்ன
குண்டல மும்பொலி வாலப் பிரயாக் குமாரத்தியாய்ச்
செண்டலர் செங்கை உலகாள்என் நாவில் சிறந்தனளே"

என்ற பாடலை பாடி முடிக்கவும் அம்மையின் கரங்களில் இருந்த பூச்செண்டு கவிராயர் கைக்கு தானாக வந்தது. 

அந்த நமசிவாய கவிராயர் அப்போது பாடியதுதான் "உலகம்மை அந்தாதி "

சபை அங்கே விழுந்து அவரை வணங்கியது, மன்னன் அவரை பணிந்து அவருக்கு வேண்டியன செய்து அன்னையினை பாட மட்டும் வழி செய்தான்

அவர் அதன் பின்  விக்கிரசிங்கபுரம் அன்னை என அவளை கொண்டாடி சிங்கை சிலேடை வெண்பா, இன்னிசைக் கலிப்பா, உலகம்மை பதிற்றுப்பத்து அந்தாதி, உலகம்மை சந்தவிருத்தம், உலகம்மை பிள்ளைத்தமிழ், பாவவிநாச வண்ணம், உலகம்மை அந்தாதி ஆகியவற்றை எழுதினார்

இது ஒரு பக்தனுக்கு அன்னை தான் அங்கு உண்டு என காட்டிய அடையாளம், அதை தொடர்ந்து ஒவ்வொரு பக்தர்களுகும் தன்னை நாடிவரும் ஒவ்வொரு பக்தனுக்கும் அன்னை அதனை தர தயாராய் இருகின்றாள், தந்து கொண்டும் இருக்கின்றாள்

அந்த ஆலயம் அவ்வலவுக்கு சிவன் அருள், அகத்தியர் அருள், அன்னையின் அருள், சூரியபகவான் அருள்வரை அள்ளி அள்ளி கொட்டும்

அங்கே சித்திரை விசு மிக உற்சாகம், அன்றுதான் சிவனும் பார்வதியும் அகத்தியருக்கு காட்சி கொடுத்த நாள், மேலும் அப்போதுதான் சூரியன் மேஷராசியில் நுழைந்து வருட கணக்கும் தொடங்கும்

அதனால் அந்த நாள் புத்தாண்டு, சூரிய அருளின் தொடக்கம் என விஷேஷம்

சூரியன் முதல் ராசிக்கு வருவதால் அன்று அந்த தாமிரபரணியில் சக்தி அதிகம், சூரியனின் கதிர்கள் வீழ்ந்து அதன் சூட்சும சக்தி அதிகம், அதை பெற்றுகொள்ள நீராடுவதும் அவசியம்

இப்படியான பாபநாசத்தில் சித்திரை வழிபாடு மிக மிக உற்சாகம், அப்படியே சாஸ்தா வழிபாடு அதாவது குல்தெய்வ வழிபாடும் கார்த்திகையில் விஷேஷம்

கார்த்திகை சாஸ்தா வழிபாடு என்பது முருகபெருமான் வழிபாட்டை ஒட்டியது, அங்கே சித்தர்களின் மூலவரும் தெய்வத்தின் மூலவரும், சக்தியின் மூலமும் இருப்பதால் அங்கு அந்த வழிபாடு விஷேஷம்

நவ கையால தலத்தில் முதல் தலம் இது

இது சிவனின் தனிபெரும் தலம், சூரியன் சம்பந்தமான எல்லா தோஷங்களும் பலவீனமும் மறைந்து ஜாதகம் உச்சம் பெறும் தலம், இதுதான் அன்னையின் தனி அருளை பெற்றும் தரும் தலம்

அங்கே அந்த தாமிரபரணி, வேத தீர்த்தம், பைரவ தீர்த்தம் ஆகியவற்றில் நீராடும் போது கர்மவினைகள் பாவங்கள் கழிகின்றன‌

பாபநாசம் அங்கே நடந்தபின் ஆத்மா சிவன் அருளில் சுத்தமாகின்றது, சூரியனின் அம்சத்தால் ஆன்ம பலம் அதிகரிக்கின்றது

அன்னையின் அருளால் எல்லா நலமும் கைகூடுகின்றது

இந்த ஆலய லிங்கத்துக்கு "முக்கிளா லிங்கம்" என்றொரு பெயர் உண்டு, அதாவது இங்கு தல விருட்சம் களா மரம், மூன்று களா இருப்பதால் முக்களா

இந்த மூன்று களாவும் ரிக் யஜூர், சாம வேதங்களை சொல்பவை, அத்ர்வண வேதம் இங்கு இல்லாதது கவனிக்கதக்கது

அதாவது அதர்வணத்தின் இன்னொரு பக்கமான ஏவல் பில்லிசூனியமெல்லாம் இங்கு மாறும், ஆம் அம்மாதிரியான சிக்கல்கள் இங்கு தீரும்

இந்த ஆலயத்தில் எல்லா வரமும் கிடைக்கும், அதற்கு சில நேச்சைகளும் உண்டு

இந்த அம்மன் முன் உரல் உண்டு, அந்த உரலில் மஞ்சளிட்டு இடித்து அன்னைக்கு சாற்றி பின் சிறிது உடலில் பூசி உட்கொண்டால் குழந்தை இல்லா பிரச்சினைகள், திருமண தடைகள், குடும்ப சண்டைகள் தீரும்.

இங்கிருக்கும் சபாபதிக்கு புனுகு சாற்றி வழிபட்டால் நினைந்த காரியம் கைகூடும்

அங்கே செல்லும் போது தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்குங்கள், சபாபதிக்கு புனுகு சாற்றி வணங்குங்கள், அன்னைக்கு மஞ்சள் இடித்து பெண்கள் வழிபட்டால் சிறப்பு

அந்த இடத்தில் ந்மச்சியாவ கவிராயர் பாடிய பாடல்களை படித்து வணங்கினால் இன்னும் சிறப்பு

இங்கிருந்து இரு கல் தொலைவில் அகத்தியருக்கும் அவர் மனைவி லோபம்த்திரைக்கும் ஆலயம் உண்டு, அதை வணங்குதல் சிறப்பு

அந்த லோபமுத்திரை முன்னால் "லலிதா சகஸ்ரநாமம்" பாடுதல் கூடுதல் பலன் தரும், காரணம் அவள்தான் லலிதா சகஸ்ர நாமம் எனும் நூலையே கொடுத்தாள், அன்னை அவள் வழியாகத்தான் கொடுத்தாள்

இத்தனை சிறப்புமிக்கது நவ கைலாய தலங்களில் முதல் ஆலயம், அது அகத்திய முனி காலம் தொடங்கி இந்திரன் முதல் எத்தனையோ தேவர்கள் ரிஷிகள் மாபெரும் மன்னர்கள் கவிஞர்கள் என எல்லோருக்கும் பெரும் வரம் அருளிய ஆலயம்

அந்த வரத்தை சிவன் கொடுப்பார், உங்கள் ஆத்மபலமும் சக்தியும் கூடும், மாசு அனறன் ஆத்மாவோடு வாழ்வின் சிக்கலெல்லாம் தீர்ந்து லவுகீகம் சிறக்கும்

ஆன்மீமாக கயிலாய நிலை எனும் சிவநிலை அடைய, சிவனோடு கலக்க முதல் சக்தியான ஆத்மபலத்தை பெறுவீர்கள் இது சத்தியம்

இது என்னுடையபதிவு அல்ல
முகநூல் பதிவின் நகலாகும்

No comments:

Post a Comment